பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன்

299 0

201611100827139270_pon-radhakrishnan-jallikattu-gravel-trying-to-hold-the_secvpfபொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையை மத்திய அரசு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி பிறப்பித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு மீதான தடை தொடரும் என்று அதே மாதம் 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டை நடத்தும் முயற்சியில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த 6-ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி அனில் மாதவை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று மத்திய பாராளுமன்ற விவகாரம், ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை மந்திரி அனந்த குமாரை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் உடன் இருந்தார்.