உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாமை குறித்து வருத்தம்! மஹிந்த தேசப்பிரிய

282 0

mahinda-deshapriyaஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாது காலம் தழ்த்தப்படுவது எனக்கும் வருத்தமளிக்கின்றது.தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானது என்ற போதிலும் தேர்தலை நடத்த வேண்டுமாயின் துறைசார் அமைச்சர் தேர்தல் தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த தேர்தல் ஆணைக்குழு 300 கோடி ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.வாக்கு எண்ணும் பணிகள் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் பற்றிய விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து எல்லை நிர்ணய அறிக்கை டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக துறைசார் அமைச்சரிடம் ஒப்படைத்து வர்த்தமானியில் அறிவித்தால், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.