தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.இந்த மரணம் தொடர்பில் ஏழு தொலைபேசி அழைப்புக்கள் வழியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி 24 வயதான லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.மூன்று தொலைபேசி நிறுவனங்களின் இலக்கங்கள் ஊடாக விசாரணை நடத்த அனுமதிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர், கடுவெல நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த விபரங்களை வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கடுவெல நீதவான் தம்மிக்க மபால உத்தரவிட்டுள்ளார்.