அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையின் உறவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இவரது பெரும்பாலான நடவடிக்கை இலங்கைக்கு சிறந்ததாக அமையும். டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரிக்கு, புலம்பெயர் தமிழர்கள் அதீத ஆதரவை வழங்கினர்.
இந்தவகையில், ஹிலாரி ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தால், இலங்கைக்கு பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும். டிரம்பின் வெற்றியானது வடக்கு தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பு வீண்போயுள்ளது.
டிரம்பின் வெற்றி இலங்கை அரசியலுக்கு சிறந்த பாடமொன்றை சொல்லித்தருகின்றது. இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த 2015ம் ஆண்டு 08ம் திகதி பெற்ற வெற்றிக்கு பயன்படுத்திய உபாய முறைமைகள், அமெரிக்காவில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
சிறுபான்மையினரை இணைத்துக் கொண்டு வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவில் தோல்வியடைந்துள்ளது.
சந்திரிக்கா பயன்படுத்தி வருவதும் ஹிலாரியின் அணுகுமுறையையே ஆகும் எனவும் தயான் ஜயதிலக்க மேலும் கூறியுள்ளார்.