தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளநிலையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அவருக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘உங்களின் ஆட்சியில் எல்லா நாடுகளின் இறைமை, சமத்துவக் கொள்கையின் அடிப்படையிலும், தேசிய அரசாங்கத்தின் உள் விவகாரங்களில் தலையிடாத விதத்திலும் புதிய உலக ஒழுங்கொன்றை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
முன்னைய குடியரசுக்கட்சி நிர்வாகம் வழங்கிய ஒத்துழைப்பு, இராணுவ உதவி, புலனாய்வு உதவிகளினாலேயே நாங்கள் விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிக்க உதவியது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உங்களது ஆட்சிக்காலத்தில் எல்லா வெற்றிகளையும் பெறுவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.