புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுவை மீளவும் கோர முடிவு

319 0

electionபுதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுவை மீண்டும் கோருவதற்கு தேவையான சட்டதிருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் பல்வேறு காரணங்களினால் அது பிற்போடப்பட்டிருந்தது.

குறித்த தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு இன்னும் செல்லுபடியாக உள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.