சுதந்ததிர இலங்கையின் 70வது வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றமத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயர் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக இலங்கையை முன்னேற்றுவது என்ற இலக்கை நோக்கி நாட்டை கட்டி எழுப்பும்வகையில் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மக்களுக்கு குறுகிய காலம் மற்றும் நீண்டகால நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் சகலதுறைகள் பற்றியும் வரவுசெலவுத் திட்டத்தல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
9.9 ரில்லியனுக்கும் அதிகமான பொதுக்கடன் காணப்படுகிறது.
இது மாத்திரமன்றி பதிவுகள் இல்லாத 1.2 பில்லியன் கடன் காணப்படும் நிலையில் நிதி நிர்வாகத்தை மேற்கொள்வது மிகவும் கடினமானது.
இருப்பினும் வரவுசெலவுப் பற்றாக்குறையை குறைப்பதற்கான சகல திட்டங்களையும் தான இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறினார்.