வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெளிவுபடுத்தல் ஒன்றை மேற்கொண்டார்!

245 0

துருக்கியின் ​பேடோ என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளதாக இந்நாட்டு துருக்கி தூதுவர் துன்ஜா கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி 12 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 21 ஆம் திகதி அவதானம் செலுத்தியிருந்தது.

இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மஹேஷா பாரதி ஜயவர்தன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் பதில் பிரதி செயலாளர் மாலிகா ஸ்ரீமதி பீரிஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இது தொடர்பில் எமது செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெளிவுபடுத்தல் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த செய்தி அறிக்கையில் துருக்கி தூதுவரால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்ததா என்று ஆணைக்குழு கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அவ்வாறு கடிதமொன்று கிடைத்திருந்ததாக ஜெயவர்தன தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் செயலாளராக தற்போதைய வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க செயற்பட்டதாக அவர் தெரிவித்ததாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மேற்கொண்ட தெளிவுபடுத்தலில் ஜயவர்தனவால் ஆணைக்குழுவின் முன்னிலையில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

அதேபோல் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றுமொரு விடயம் தொடர்பில் தெளிவுபடுத்திய செயலாளர் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு என்பது அமைச்சுக்கு கீழ் உள்ள மேற்கு பிரிவுக்கு சொந்தமான துணைப்பிரிவு என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் குறித்த செய்தியில் குறிப்பிடப்படுகின்ற படி வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கீழ் வர்ண ஜயசுந்தர என்ற பெயரில் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவர் செயற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவ்வாறானதொரு பதவி ஒன்று இல்லை ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.