நலன்புரி முகாம்களில் உள்ளவர்களை குடியேற்ற காணி கொள்வனவு

340 0

cvax-1யாழ்ப்பாணம் நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுள் 220 குடும்பங்களுக்கு காணிகள் தேவையாக உள்ளது.

அரச காணிகள் இல்லாததினால் இவர்களுக்கென தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நலன்புரி முகாம்களில் 971 குடும்பங்கள் தங்கியுள்ளன.

இவர்களுள் 682குடும்பங்கள் தமது சொந்த இடங்களை இழந்தவர்களாவர்.

இவர்களுள் 462 குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஏனைய 220 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவே காணிகள் தேவைப்படுவதாகவும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தனியார் காணிகள் கொள்வனவிற்காக 88 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.