45 கோடி பெறுமதியான கொக்கேய்ன் மீட்பு

311 0

fotor05051467இலங்கையில் 45 கோடி ரூபா பெறுமதயிhன கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

களனி, பெத்தியாகொட பிரதேசத்தில் நேற்று மாலை சுமார் 31 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பெத்தியாகொட பிரதேச களஞ்சியசாலை ஒன்றின் கொள்கலனிலிருந்து கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது 8 கிலோ கிராம் மற்றும் 844 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சீனி கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சீனி கொள்கலனின் கொக்கேய்ன் போதைப் பொருள் அடங்கிய 29 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சீனி கொள்கலன்களை இறக்குமதி செய்தவர்கள் மற்றும் களஞ்சியசாலையின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.