வடக்கு மாகாண ஆளுநர் தன்னுடைய எல்லையை மீறிச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பொதுச் சந்தை கடைத்தொகுதி திறப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஆளுநருக்குரிய கட்டுக்கோப்புக்குள் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படவில்லை என்றும் அவர் ஒரு அரசியல்வாதியாக செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.