சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புடைய 6 இந்தியர்கள் தப்பியோட்டம்-கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன

345 0

jailசிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்ற இந்திய பிரஜைகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மிரிஹான பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மிரிஹான தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று நண்பகல் 6 இந்திய பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த மத்திய நிலையம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்று என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.