ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசு கட்சி வரலாற்று ரீதியான வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலப் பகுதியில் தாம் அமெரிக்காவுடன் மிக ஒற்றுமையுடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மற்றும் பேஸ்புக் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.