யாழ் மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- யாழ் நகர சுகாதாரம் பாதிப்பு(படங்கள்)

336 0

mcயாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் யாழ்ப்பாண மாநகரம் கழிவுத்தேக்கத்தினால் சுகாதார பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதானால் யாழ்ப்பாண நகரம் குப்பை மேடாக காணப்படுகிறது.

மாநகரசபைக்குட்பட்ட சந்திகள், மாநகரசபை வீதிகள், சந்தைப்பகுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் குப்பைகள் சிதறுண்டு காணப்படுகிறது.
சுகாதாரத் தொழிலாளிகள் 127 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை பணிப்புறக்கணிப்பை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பையடுத்து யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் முதலமைச்சரின் பிரதிநிதிகள் இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்ற சுகாதாரத் தெரிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட 23 வட்டாரங்களின் சுகாதார தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணத்தினால் நாடளாவிய ரீதியில் கழிவுகளைத் தரம்பிரித்து அகற்றும் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

mc-2 mc-4 mc-5 mc-6 mc-7 mc-8 mc-9 mc-10 mc3 mc-1