ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு

358 0

ravi-karunanayakkaநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரினால் கடந்த மாதம் 18ஆம் திகதி 12 ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் மூன்று சம்பவ்ஙகள் குறித்து இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தவிர மேலும் 9 அமைச்சர்களுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.