யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் கைதான அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றையதினம் ஆவாக் குழுவுடன் தொடர்கொண்டமைக்காக கைதான 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.