பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளுக்கான அமைச்சர் பரோன்ஸ் ஜோஸ் என்லே இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அதிகபடியான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.