தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு – பொன் ராதாகிருஷ்ணன்

335 0

20689tamil-daily-news-paper_36551630497தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

மீனவர்களின் பிரச்;சினையை தீர்ப்பதில் இந்திய மத்திய அரசாங்கம், பொறுப்புக்கூறுபவராக செயற்பட தயாராகவுள்ளது.

இலங்கை மீனவர்கள் தங்களின் அரசாங்கத்தின் ஊடாக அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்களானால், இந்திய அரசாங்கம் பேச்சு நடத்தும்.

அதேநேரம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

எனினும் வடமாகாணமே இதற்கு எதிராக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.