சமஷ்ட்டி யோசனை முன்வைக்கப்படவில்லை – பிமல் ரத்நாயக்க

486 0

1103489467bimalபுதிய அரசியல் யாப்பு குறித்து வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பில் வழி நடத்தல் குழு ஒன்று செயற்படுகிறது.

இந்த குழு இன்னும் அரசியல் யாப்பு தொடர்பில் குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்கேனும் வரவில்லை.

அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வைக் கோரிய எந்த யோசனையையும் இந்த குழுவிடம் முன்வைக்கவும் இல்லை.

ஆனால் சிலர் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வுக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டைப் பிரிக்கும் செயல் என்றும் கூறி வருகின்றனர்.

இது போலியான குற்றச்சாட்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.