தற்போதைய நிலையிலும் பல்வேறு அமைப்புகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர், தாம் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனை அடுத்து 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் 19ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
உலகில் எந்த ஒரு தலைவரும் தமது அதிகாரத்தை குறைப்பதற்கு இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.
அந்த அர்ப்பணிப்பை தாம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இவ்வாறு வெளிப்படையாக பேசக்கூடிய மற்றும் பேச முடியாத பல விடயங்கள் இருக்கின்றன.
ஆனால் இந்த விடயங்களை வைத்து போலியான பிரசாரங்களை செய்யும் சிலர் அரசாங்கத்தை குழப்ப முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.