சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரானது – சங்கரி

315 0

sangaree_sampanthan-415x260தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய அமைச்சர் பரோனெஸ் ஏன்லேயிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் ஜனநாயக ரீதியாக எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவில்லை.

அவர் அரசாங்கத்துக்கு நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கரி தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

இதேநிலைப்பாட்டை வலியுறுத்தி கடந்த தினம் அவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாடுகளை சங்கரி தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவரை தொடர்பு கொண்ட கேட்ட போது, இவ்வாறானவர்களின் கருத்துகள் குறித்து கூட்டமைப்பு அக்கறைக் கொள்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் கூறியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.