துன்புறுத்தல்கள் குறித்த மாநாடு ஜெனீவாவில்

314 0

manithavurimai-peravai-680x365துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளது.

எட்டாம் ஆரம்பமான இந்த மாநாடு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் நடைபெறும்.

இதில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் நிபுணர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை சார்பில் சட்ட மா அதிபர் தலைமையிலான குழு ஒன்று பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.