வடக்கில் ஒவ்வொரு புதிய விடயத்திற்கும் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்க்கும் ஒரு புதிய வியாதி உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒழுங்கான ஆட்சி நிலை இல்லையெனவும், அதற்காக சர்வதேசத்தின் உதவியைப் பெறவேண்டுமெனவும் அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இக்கருத்து வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பதிலளிக்கையில், நேற்று முன்தினம் பிரித்தானிய பிரதிநிதிகள் வந்திருந்தபோது தான் அவர்களிடம் இத்தொற்றுநோய் தொடர்பாகப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.