யாழில் ஒரு இளைஞர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!

333 0

arrest-logo-colourful_104700யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டத்தரிப்பு – செட்டிகுறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளைஞன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதை அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நபர் கைதுசெய்யப்படும்போது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்மிடம் ஓர் ஆவணம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 13பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.