யாழில் கைதாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

317 0

201609180153072508_8-is-militants-arrested-in-pakistan_secvpfயாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

நேற்றும் பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி மற்றும் நெல்லிடிப்பகுதிகளைச் சேர்ந்த மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு திடீரெனச் சென்றகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்தனர்.

வீட்டில் மேல் தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றையும் அவர்கள் மீட்டுஎடுத்துச் சென்றனர்.யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, குழு மோதல் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்கள்அதிகரித்துள்ளன.சுன்னாகம் பகுதியில் பொலிஸார் இருவர் அண்மையில் வாள்வெட்டுத்தாக்குதலுக்கு இலக்காயினர்.

இந்நிலையில் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை தேடிக் கைது செய்யும்நோக்குடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது.

இந்தக் குழுவினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஏழு பேர்கைது செய்யப்பட்டதாக யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று செவ்வாய் இரு நாட்களிலும் நால்வர்கைதாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றுவரை வெளியான உறுதியான தகவல்களின் படி இதுவரை 11 பேர் பயங்கரவாத குற்றத் தடுப்புபிரிவு விசேட குழுவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவ தரப்பைசேர்ந்த ஒருவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் கைதானவர்களில்அடங்குகின்றனர்.