வடக்கு – கிழக்கு மக்களுக்கு அதிர்ச்சி – புதிதாக 100 விகாரைகள்

294 0

44294902வடக்கு மற்றும் கிழக்கில் 100 விகாரைகளை அமைப்பதற்கும் குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளை புனரமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, வடக்ககு கிழக்கில் காணப்படும் குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளை புனரமைப்பதற்கு சீனாவிலுள்ள பௌத்த சங்கம் ஒன்றின் தலைவர் ”மிங் செங்” என்பவர் 20.24 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக உருவாகும் புத்த சிலைகளுக்கும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசியல்வாதிகளும் கண்டனம் வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

இந்த நிலையில் புதிதாக உருவாகும் 100 விகாரைகள் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.