ஆவா குழுவின் பின்னணியில் ஓர் அமைப்பு – ராஜித

310 0

a86f81678f657ec34261292f611d3c0b_xlநாட்டில் மதவாதம், இன வாதம் என்பவற்றை, யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆவா குழுக்களின் செயற்பாடுகளும், ஏனைய செயற்பாடுகளும் ஏற்படுத்துகின்றது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(09) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சி முறையற்றது என மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த மறைமுகமாக ஒரு குழு செயற்பட்டு வருகின்றது. ஆவா குழுவின் பின்னணியில் ஒர் அமைப்பு அவசியம் காணப்படுகின்றது. அவை அரசியல் ரீதியான அனுகுமுறையே.

அத்தோடு ஆவா குழு போன்ற செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் இனி ஒரு தேர்தல் நடத்தாது, ராஜா அரசியலினை மீண்டும் கொண்டுவருதற்கான தேவையினாலே மேற்கொள்ளப்படுன்றது. மேலும், நாட்டினை பாதுகாத்தார்கள் என்பதற்காக இராணுவத்தினரின் அனாவசிய செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்காது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஒரு சில இரணுவத்தினரே ஈடுபட்டு வருகின்றனர். அதனால் முழு இராணுவத்தினரையும் தவறு சொல்ல முடியாது. மேலும் ஆவா குழுவில், தமிழ் இளைஞர்கள் பின்னணியில் செயற்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.