தான் நாட்டில் இருந்திருந்தால் படைவீரர்கள்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன் என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தைக் கொண்டுசெல்வதில் பாரிய சவால்கள் காணப்படுவதாகவும், அனைத்தையும் வெளியிடமுடியாதுள்ளதாகவும் தெரிவித்த அவர், தான் நாட்டில் இருந்திருந்தால் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ள அனுமதித்திருக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அங்கவீனமுற்ற படைவீரர்களின் பிரச்சினை கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து நான்கு மாதங்களுக்கு முன்னதாக பேசப்பட்டதாகவும் இது குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் போராட்டத்திற்கு பின்னணியில் ஒரு அரசியல் சக்தி இயங்குவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.