ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அடியோடு மாற்ற வேண்டும் என்ற முடிவை 6 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடி எடுத்து விட்டார். இதையடுத்து அவர் இது தொடர்பான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு ரகசியமாக மேற்கொண்டார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அடியோடு மாற்ற வேண்டும் என்ற முடிவை 6 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடி எடுத்து விட்டார்.
இதையடுத்து அவர் இது தொடர்பான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு ரகசியமாக மேற்கொண்டார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போகப்போகிறது என்ற ரகசியம் 4 பேருக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஆகிய 4 பேருக்கு மட்டுமே அதுபற்றி தெரியும்.
இவர்கள் 4 பேரும் கடந்த 6 மாதங்களாக புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் பற்றி அடிக்கடி விவாதித்து வந்தனர். அதன் பேரில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக ஏராளமான 100 ரூபாய் நேட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இந்த புதிய நோட்டுகள் நாடெங்கும் புழக்கத்தில் விட தயார் நிலையில் உள்ளன.
அதுபோல அதிநவீன பாதுகாப்பு தொழில் நுட்பத்துடன் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடித்து இருப்பு வைக்கப்பட்டன. அவையும் ரகசியமாக இருப்பு வைக்கப்பட்டது. கடந்த 6 மாதமாக இந்த பணியை பிரதமர் மோடி தலைமையிலான குழு ஓசையின்றி செய்தது குறிப்பிடத்தக்கது.