புதுவை நெல்லித்தோப்பு, 3 தொகுதி தேர்தல்

273 0

201611091231017280_3-constituency-election-mk-stalin-7-days-campaign_secvpfபுதுவை நெல்லித்தோப்பு, 3 தொகுதிகளில் தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 7 நாட்கள் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

இத்தொகுதிகளில் தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 7 நாட்கள் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அவரது சுற்றுப்பயணம் விவரம் அறிவிக்கப்பட் டுள்ளது. 10, 11-ந்தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.

13-ந்தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்-மந்திரியுமான நாராயணசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.14, 15 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.16, 17-ந்தேதிகளில் தஞ்சை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.