சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் பலி

304 0

201611090718134648_raid-kills-7-children-in-syria-rebel-bastion-says-syrian_secvpfசிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு தரப்பு மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளி சோதனை தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.

இட்லிப் மாகாணத்தின் தெற்கில் உள்ள கான் ஷேகு நகரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியில் தங்களது விமானம் தாக்குதலை நடத்தவில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.