வென்றார் டொனால்ட் டிரம்ப்

314 0

_92347329_trumpvictoryஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.

ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.