தமிழர்கள் தம்மை இலங்கையின் தேசிய இனமாக ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் இலங்கைக்கு படையெடுத்த தமிழக மன்னரின் இராணுவத்தில் இடம்பெற்றிருந்த சிலர், யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறியதன் மூலமே, இலங்கையில் நிரந்தரமாக வாழும் தமிழினமொன்று உருவாகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் புதிய வரலாறு ஒன்றை நிறுவ முயற்சித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களை வந்தேறுகுடிகள் என அழைத்த உதய கம்மன்பில, அதனால் தமிழர்களுக்கு இலங்கையில் சுயாட்சி அதிகாரத்தை கோரவோ, பிரிந்து செல்வதற்கான உரிமையை கேட்பதற்கோ அருகதை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.