இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் என்று மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னகோன் சூளுரைத்துள்ளார்.
வழக்கு தொடர்வதன் மூலம் அதனை நிறுத்திவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது என்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.