புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது – அருட்தந்தை சத்திவேல்

327 0

fr-sathivadgrsdil-450x290பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது என மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் எச்சரித்துள்ளார்.

நாட்டில் நடைமுறையிலுள்ள மிகவும் ஆபத்தான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தற்போதுள்ள சட்டத்தை விட மிகவும் ஆபத்தானது என்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.