வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, விசாரணைக் குழுவின் செயலாளராக குணசீலன் காஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகளும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண தலைமைச் செயலர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த குழுவின் செயற்பாடுகள் இன்னும் ஆரம்பமாகவில்லை என கடந்த வாரம், லிங்கநாதனினால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே, அந்த குழுவின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.