ஆவா குழுவினைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது வாள்களும் மீட்பு

323 0

5739-1-5f0b98ac044495d25d81cf8eabbc0a5cஆவா குழுவினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவரை கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார், பொற்பதிப் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 வாள்களையும் மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த மாணவரின் பெற்றோரிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து கொழும்பிற்கு அழைத்துச் செல்வதாக உறுதிப்படுத்தும் சான்றுச் சீட்டு ஒன்றினை கையளித்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட தொடர்ச்சியான விசாரணையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் திருநெல்வேலிப் பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாக்கிழமை இரவு வரைக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரின் கைதுகள் தொடந்து செல்கின்றது.