மாவீரர் வாரத்தை அனுஸ்ரிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் அழைக்கிறார் -எம்.கே.சிவாஜிலிங்கம்-

323 0

img_9015தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நவம்பர் 21 ஆம் திகதியில் இருந்து 27 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தை மாவீரர் வாரமாக அனுஸ்டிக்க அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் மக்களது விடுதலைக்கான போராட்டமானது ஆயுத வழி போராட்டமாக மாற்றமடைந்த பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு இவ் இறுதி யுத்ததிலே இலட்சக்கனக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன் விடுதலை போராட்டத்திற்காக 50ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் உயிரிழந்திருந்தனர்.
இத்தகைய தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர் நீத்த வீரமறவர்களுக்கும் இதன் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக நவம்பர் மாதம் 21ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக பிரகடணப்படுத்தி அதனை அனுஸ்டிக்க அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும்.
குறிப்பாக தென்னிலங்கையிலே ஜே.வி.பி யினர் போராட்டத்தில் கொல்லப்பட்ட தோழர்களுக்காக கார்த்திகை வீரர்கள் தினமாக அவர்களால் கொண்டாப்பட முடியுமானால் எமது இன விடுதலைக்காக போராடி உயிர் நீத்த எமது உறவுகளையும் நாம் நினைவுகூர முடியும். அவ்வாறு நாம் நினைவுகூருவதனூடாகவே நாம் விடுதலைக்கு தகுதியானவர்களாகவும் இருக்க முடியும்.
எனவே இவ் ஒருவார காலமும் புலம்பெயர் தமிழர்களும் தாயக தமிழர்களும் அனைவரும் எந்தவிதமான ஆடம்பர நிகழ்வுகளிலும் ஈடுபடாமல் இதனை புனித வீரமாக அனுஸ்டிக்க வேண்டியதுடன் 27ஆம் திகதி மாவீர் தினமாக ஆலயங்களில் அமைதியான முறையில் வழிபாடுகளை நடாத்தி இத் தினத்தை அனுஸ்டிக்க வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.