இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இனி இடமில்லை!

438 0

champika-ranawaka_8மீண்டும் இலங்கையை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து உரையாற்றியவர்,நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்திவருகிறது. நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.

எவ்வாறாயினும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது அடுத்தக்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.மேலும் தற்போதைய அரசாங்கம் ஜனாநயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால்தான் கூட்டு எதிரணியின் அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்.அரசியல்வாதிகள் மட்டுமன்றி எவராலும் அரசாங்கத்தை விமர்சிக்க முடிகின்றது. அந்தவகையான சூழ்நிலைகளை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. என்றார்.