ஆவா குழுவின் பின்னணியில் இனவாதிகளே உள்ளனர்!

326 0

chandrika-kumaratunga-400-seithyவிடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சகல இனவாத குழுக்களையும் கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என தெரியாது ஆனால் பின்னணியில் இருப்பவர்கள்  நிச்சயம் இனவாதிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஆவா குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.