அமெரிக்க தேர்தல் – வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.

306 0

article-3915102-3a299b4900000578-264_964x436__1_அமெரிக்கா மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், நியூ ஹெம்ஷேயர் மாநிலத்தின் சில பகுதிகளில் வாக்களிப்புகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன், மற்றும் குடியரவு கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பிரதான போட்டியாளர்களாக விளங்குகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பெறுபேறுகள் இன்று இரவில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு போட்டியாளர்களுக்கும், வடக்கு கரொலினா, பென்சைல்வேனியா மற்றும் மெக்சிகன் ஆகிய மாநிலங்களில் கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.