ஜெர்மனியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

316 0

201607252346294273_ansbach-bombing-isis-claims-responsibility-for-attack-in_secvpfஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை ஜெர்மனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிரேஸ்ட ஐ.எஸ் போராளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 வயதான ஜிகார்தி ஒருவர், ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் சிரியாவில் பல மாதங்கள் தங்கியிருந்தவர் எனவும், அவர் துருக்கியில் தாக்குதல் மேற்கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அவர் கடந்த செப்டம்பர் மாதம் ஜெமனுக்கு சென்றுள்ளார்.

இதனிடையே, கடந்த வாரம், ஜெமனில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சிரிய நாட்டை சேர்ந்த ஒருவர் பெர்லின் (டீநசடin) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.