விசேட தேவையுடையவரின் போராட்டம் – திட்டமிட்ட சதி

359 0

23விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று ஜனாதிபதி காரியாலய வளாக பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைதியற்ற வகையில் சிலர் செயற்பட்டனர்.

இது அரசாங்கத்தை சிக்கலுக்கு உள்ளாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், அரசாங்கம் மற்றும் இராணுவத்தினருக்கிடையே, பாரிய பிளவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சென்ற விசேட தேவையுடைய இரணுவத்தினர், தம்மை அங்கு அனுப்பியது யார் என அறியாதிருந்தனர்.

அத்துடன், பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு செயற்பட்டமையானது திட்டமிட்ட அரசாங்க எதிர்ப்பு செயற்பாடாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இவர்களின் கோரிக்கைகள் அடங்கிய பத்திரம் ஒன்றை நான்கு மாதங்களுக்கு முன்னர், அமைச்சரவைக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதனடிப்படையில், திறைச்சேரியின் அனுமதியை பெற்று அதனை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.