சவுதி அரேபிய முகாமில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்(படங்கள்)

357 0

sequence-01-still003சவூதி அரேபியாவின் ஒலேய்யா பபா முகாமொன்றில் இலங்கைப் பணிப் பெண்ணான பழனியாண்டி கற்பகவள்ளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியா தூதுவராலயத்தின் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி சவூதி அரேபியா நோக்கி பயணமாகியுள்ளார்.

இந்த பின்னணியில் கடந்த முதலாம் திகதி அவர் சவூதி அரேபியாவிலுள்ள முகாமொன்றில் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பழனியாண்டி கற்பகவள்ளி என்ற பெண் சுயநினைவை இழந்த நிலையில், முகாமிற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக அந்த முகாமிலுள்ள இலங்கை பெண்கள் சமூக வலைத்தள உதவியுடன் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனைகளுக்கு அமைய, அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகள் குறித்த முகாமிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது அந்த நாட்டிலுள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

sequence-01-still007 sequence-01-still006 sequence-01-still005