தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலமே பெறலாம்-இரா.சம்பந்தன்(படங்கள்)

353 0

img_5447தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயநாடுகளின் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேயை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சந்தித்த பின்பு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றதென்றும் இருந்தும் மிகுதிக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்ப் பகுதிகளில் தமிழர் பிரதேசங்களில் கூடுதலான இராணுவப் பிரசன்னம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதன் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பரோன்ஸ் அனிலேககு விளக்கப்பட்டத்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்திற்கு பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் அவசியம் என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் யாப்பு உருவாக்கம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலஙகை அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயநாடுகளின் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே கருத்து வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

img_5442

img_5444