கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கரைச்சிக்கோட்டப்பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை கற்றுவரும் மாணவர்களுக்கான பால்நிலை சமத்துவம் போதைப்பொருள் கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான ஒரு நாள் தலைமைத்துவ கருத்தரங்கு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கரைச்சிப்பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
புலம்பெயர் அமைப்பான செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சட்டத்தரணி எஸ்.விஜயராணி ஆகியோர் வழங்கி வைத்தனர்.