புதிய கட்சிக்கு மகிந்த தலைமை தாங்க வேண்டும் : ஜி.எல்.பீரிஸ்

314 0

83869251_pmreuters4-720x480-1புதிய கட்சியில் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பொது ஜன பெரமுன கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு மகிந்த ராஜபக்ஸவை நாம் சம்மதிக்க வைப்போம் என ஜி.எல்.பீரிஸ் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விடயம் தொடர்பில் மகிந்த எந்த கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

இதேவேளை,அதற்கு ஒப்புக் கொள்வார் என பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் பீரிஸின் புதிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றமையினால் அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை இழக்கப்பட்டது, இருப்பினும் மகிந்தவின் கூட்டு எதிர்க்க்ட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அரசியல்வாதியாக செயற்ப்பட்டு வருகின்றார்.

எவ்வாறாயினும், தனது உறுப்புரிமையைப் பறிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்திருந்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட்ட போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவும் இடை நிறுத்தப்பட்டார்.

பின்னர் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அந்த முடிவை இரத்துச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனவே இதனை வைத்து தனது நீக்கம் தொடர்பிலும் ஆராய வேண்டும் என பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.