யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் யாழ்ப்பாண காவல்துறையினர் இணைந்து இவர்களை அண்மையில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.