ஈராக்கின் மோசுல் நகரில் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியொன்றில் இருந்து பாரிய மனித புதைக் குழி ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மோசுலை மீட்பதற்கான இறுதி யுத்தம் இடம்பெற்று வருகிறது.
தற்போது அங்குள்ள முக்கிய பகுதிகள் பல ஈராக்கிய படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஹமாம் அல் அலில் என்ற நகரில் இருந்து இந்த புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்களின் படி அங்கிருந்து இதுவரையில் 100 சடலங்கள் வரையில் மீட்கப்பட்டுள்ளன.
இவை ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.