சைட்டம் எனப்படும் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக இன்றும் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் சிலர் மௌனப் போராட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.
இதற்கிடையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு இலங்கை வைத்திய சபையின் பதிவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.